ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சமையலறை .ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரு சமைக்கும்பெண்கள்.மனித வளத்தை எவ்வளவு வீணாக்குகிறோம் ? நம் வீடுகளைக்கட்டும்போதே இனி சமையலறை இல்லாமல் கட்ட வேண்டும். பின் எப்படி சாப்பிடுவது ? கட்டாயம் கேள்வி எழும். ஏன் வீட்டில் சாப்பிடுகிறோம் ? சுகாதாரமான , சுவையான , சிக்கனமான உணவுக்காகவே . இப்படிப்பட்ட உணவு உணவகத்தில் கிடைத்தால் ? அரசு அல்லது கூட்டுறவு முறையில் உணவகங்கள் நடத்தலாம். அரிசி ,மளிகை மற்ற பொருள்களுக்குக் கொடுக்கும் மானியத்தை இதற்குக் கொடுக்கலாம்.
நம் வீட்டுப் பெண்கள் உணவகங்களுக்கும் வேலைக்குப் போகலாம் .கூடுதல்
வருமானம் .உணவுக்கு இன்னும் கொஞ்சம் செலவு செய்ய முடியும் .குடும்பத்தோடு
உணவகம் சென்று உணவு அருந்தலாம் . கடுப்படிக்கும் கடுமையான பணியான
சமைத்தலிலிருந்து பெண்கள் விடுபடலாம் .பண்பாடு என்பதன் பேரால் நம் பெண்கள் படும் அவதிகளில் இருந்து பெரிதும் விடுபடலாம் .குழந்தைகளை இன்னும் செம்மையாக வளர்க்கலாம் .சண்டையில்லாமல் சந்தோஷமாக குடும்பம் நடத்தலாம்.அன்பு !அன்பே எங்கும் இருக்கும் .
இதுவெல்லாம் சாத்தியமா? ஏன் முடியாது? ஒரு செய்தி.இண்டியன் காஃபி போர்ட் மூடப்பட்டபோது வேலை யிழந்த தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் ,அப்போதைய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆலோசனையின்பேரில் நேருஜி ஆணையிட்டு ஒரு உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் இன்றைய இந்தியன் காபி ஹவுஸ் .புதுவையைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை உட்பட ஆறு கிளைகளைக்கொண்டு இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
எண்ணுவதெல்லாம் எய்துப எண்ணியர்
திண்ணியராகப் பெறின். -வள்ளுவர்
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திரு நாட்டில்
மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே -பாரதிதாசன்
No comments:
Post a Comment