பகை முடிப்போம்
சாலையைக் கழுவியதில்
சேலையைத் துவைக்கும்
நிலைமாறு வதெப்போது
பாலைத் தேடியழும்
பிள்ளைப் பேய்ப்பசியும்
நீங்குவ தெப்போது
கூழையே குடித்துதினம்
வாழ்வையேமுடிக்குமவர்
வாழ்வுமோர் வாழ்வோ
ஏழைபாழையவர்
பிறர்க்கே உழைத்துதினம்
நாளைக்கழித்தல் நன்றோ ?
சூளையில்வெந்திடும்
செங்கலாய்ஆலையில்
கழனியில் வேகின்றார்
நாளை நல்லதொரு
வேளைவருமென
தேவரை வணங்குகின்றார்
கூடியழுதுதினம்
கோயில்நாடிசுகம்
கண்டமாந்தருண்டோ ?
கோடிகோடியாயவர்
கூடிப்பகையறிந்து
முடித்தலே வழியன்றோ !
சாலையைக் கழுவியதில்
சேலையைத் துவைக்கும்
நிலைமாறு வதெப்போது
பாலைத் தேடியழும்
பிள்ளைப் பேய்ப்பசியும்
நீங்குவ தெப்போது
கூழையே குடித்துதினம்
வாழ்வையேமுடிக்குமவர்
வாழ்வுமோர் வாழ்வோ
ஏழைபாழையவர்
பிறர்க்கே உழைத்துதினம்
நாளைக்கழித்தல் நன்றோ ?
சூளையில்வெந்திடும்
செங்கலாய்ஆலையில்
கழனியில் வேகின்றார்
நாளை நல்லதொரு
வேளைவருமென
தேவரை வணங்குகின்றார்
கூடியழுதுதினம்
கோயில்நாடிசுகம்
கண்டமாந்தருண்டோ ?
கோடிகோடியாயவர்
கூடிப்பகையறிந்து
முடித்தலே வழியன்றோ !
No comments:
Post a Comment